தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

by Editor / 19-04-2021 09:18:06am
தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது : மத்திய அரசு!

கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணிகள் பாதிக்கக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா 2-வது அலையின் தாக்கம், மக்களை உலுக்கி வருகிறது. முதல் அலையை விட வேகமாக பரவும் கொரோனா 2-வது அலையால், நோய்த் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
மேலும், கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. இந்நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளால், தடுப்பூசி போடும் பணி பாதிக்கக்கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. 

Tags :

Share via