ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கொரோனா சிகிச்சை!

by Editor / 19-04-2021 02:17:28pm
ஆட்டோவிலேயே பெண்ணுக்கு கொரோனா சிகிச்சை!

கர்நாடக மாநிலத்தில் நேற்று ஒரே நாளில் 19,067 பேருக்கு புதியதாக பாதிப்பு உறுதியான நிலையில், இதுவரை பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 11,61,065 ஆக உயர்ந்துள்ளது . நேற்று 81 பேர் உயிழந்துள்ளதுடன், இதுவரை 3,351 பேர் மரணம் அடைந்துள்ளனர். தற்போதைய நிலையில், மாநிலத்தில், 1லட்சத்து 33ஆயிரத்து 543 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகரித்து வரும் பாதிப்பு காரணமாக, அரசு மருத்துவமனைகளில் உள்ள அனைத்து படுக்கைகளும் நிரம்பி உள்ளன. இதனால், ஏராளமான நோயாளிகள் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் அல்லாடி வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம், கல்புர்கி மாவட்டத்தைச் சேர்ந்த 55 வயதான் பெண் ஒருவர் சளி மற்றும் மூச்சுத்திணறலால் அவதிப்பட்டதால், அவருக்கு எடுக்கப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியானது. இதையடுத்து, அவரை கல்புர்கி ஜிம்ஸ் மருத்துவமனைக்கு குடும்பத்தினர் அழைத்து வந்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பியதால், அவரை அனுமதிக்க மறுத்தனர்.
இதைத்தொடர்ந்து அவர் வந்த ஆட்டோவையே, பெட்டாக மாற்றி, மருத்துவமனை வளாகத்தில் அவருக்கு ஆக்சிஜன் சிலிண்டர் இணைத்து, சிகிச்சை தற்காலிகமாக வழங்கப்பட்டது. மேலும், ஆட்டோவிலேயே வேறு மருத்துவமனையில் இடம் கிடைக்கிறதா என பார்க்க வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, அந்த பெண் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் சுமார் 5 மணி நேரம் ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றி, சிகிச்சை பெற இடம் உள்ளதா என தேடி வந்திருக்கிறார். இந்த சம்பவம் பொதுமக்களிடையே கடுமையான அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags :

Share via