"பிங்க் வாட்ஸ்அப் லிங்கை ஓப்பன் செய்ய வேண்டாம்!"

by Editor / 19-04-2021 02:20:42pm

கடந்த சில நாட்களாகவே பல்வேறு வாட்ஸ்அப் குழுக்களில் பிங்க் வாட்ஸ்அப் என்ற ஒரு லிங்க் வந்திருப்பதை எல்லோரும் கவனித்திருப்பீர்கள். அது வாட்ஸ்அப் செயலியின் புதிய அப்டேட் என சொல்லி பரவலாக பகிரப்பட்டது. அந்த லிங்கை ஓப்பன் செய்து அதனை இன்ஸ்டால் செய்தால் புதிய அம்சங்களுடன் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தலாம் என்ற தகவலும் வலம் வந்தது. ஆனால் அந்த லிங்கை ஓப்பன் செய்ய வேண்டாம் எனவும். அது ஒரு வைரஸ் எனவும் ஸ்மார்ட்போன் பயனர்களை எச்சரித்துள்ளனர் சைபர் தொழில்நுட்ப வல்லுனர்கள் .
'WhatsApp பிங்க் என ஷேராகும் APK லிங்கை யாரும் ஓப்பன் செய்ய வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். அது ஒரு வைரஸ். அதனை கிளிக் செய்தால் போனை பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவீர்கள். கவனம்' என தெரிவித்துள்ளார் சைபர் தொழில்நுட்ப பாதுகாப்பு வல்லுனர் ராஜசேகர் ராஜஹாரியா.
கூகுள் மற்றும் ஆப்பிள் தளங்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை தவிர்த்து வேறு எந்த ஒரு அப்ளிகேஷனையும் ஸ்மார்ட்போன் பயனர்கள் போனில் இன்ஸ்டால் செய்ய வேண்டாம் என சைபர் இன்டெலிஜென்ஸ் நிறுவனமான வாயேஜர் இன்ஃபோசெக் இயக்குனர் ஜித்தன் ஜெயின் தெரிவித்துள்ளார்.
'இந்த மாதிரியான தீங்கு விளைவிக்கும் அப்ளிகேஷன்கள் போனில் உள்ள போட்டோ, செய்திகள் என அனைத்து தரவுகளையும் ஹேக் செய்ய பயன்படுத்தப்படும். அதனால் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோர்களில் கிடைக்கும் அப்ளிகேஷன்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அவர் எச்சரிக்கிறார்.

Tags :

Share via