60 ஆயிரம் பாட்டில்கள் கோவிட் ஷில்டு தடுப்பூசி மருந்து சென்னை வந்தது

by Editor / 20-04-2021 04:33:59pm
60 ஆயிரம் பாட்டில்கள்  கோவிட் ஷில்டு தடுப்பூசி மருந்து சென்னை வந்தது

தமிழகத்தில் கொரோனா 2வது அலை அதிகமாக பாதிப்பதால் மத்திய மருந்து தொகுப்பில் இருந்து தமிழகத்திற்கு கூடுதலாக தடுப்பூசிகளை மத்திய அரசு வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை வைத்தது.
இதையடுத்து பிரதமா் மோடி உத்தரவின் பேரில் புனேவில் உள்ள மத்திய மருந்து சேமிப்பு கிடங்கில் இருந்து 6 லட்சம் டோஸ் (60 ஆயிரம் பாட்டில்கள்) கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. 
6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசி மருந்துகள் அடங்கிய 60 ஆயிரம் மருந்து பாட்டில்களை 50 பாா்சல்களாக ஏற்றிக்கொண்டு விமானம் புனேவில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது. இந்த விமானம் மாலை 3.50 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய விமானம் முன்னதாகவே மாலை 3.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்து சோ்ந்தது.விமானத்தில் இருந்து மருந்து பாா்சல்களை இறக்கி கண்டெய்னா் வாகனம் மூலம் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். மருத்துவ தலைமை அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.தமிழகத்திற்கு மத்திய மருந்து தொகுப்பில் இருந்து இதுவரைகோவிஷீல்டு – 47,03,590 டோஸ்

கோவேக்சின் – 8,82,130 டோஸ்,  கோவிஷீல்டு- 6 லட்சம் டோஸ்கள்,  கோவிஷீல்டு – 53,03,590 டோஸ்

கோவேக்சின்- 8,82,130 டோஸ்,த்தம் : 61,85,720 டோஸ்கள் மத்திய தொகுப்பில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது.
 

 

Tags :

Share via