பிங்க் வாட்ஸ் அப் பயங்கரம் காவல் துணை ஆணையர் எச்சரிக்கை

by Editor / 21-04-2021 06:38:58pm
பிங்க் வாட்ஸ் அப் பயங்கரம்  காவல் துணை ஆணையர் எச்சரிக்கை

 

 

பிங்க் வாட்ஸ் அப் என்ற பெயரில் ஒரு லிங்க் சிலரது செல்போன்களுக்கு சில நாட்களாகவே வருகிறது. இது வாட்ஸ்அப் நிறுவனத்தின் லிங்க் என்று நினைத்து பலரும் அதை கிளிக் செய்யும்போது, தங்கள் செல்போன்களில் உள்ள தொடர்பு எண்கள், வீடியோக்கள், போட்டோக்கள் எல்லாவற்றையும் இழந்து தவிக்கின்றனர்.அந்த லிங்கை கிளிக் செய்ததும் மொபைல் ஹேக் செய்யப்பட்டு அதில் உள்ள அனைத்து தகவல்களும் திருடப்பட்டுவிடுகின்றன. பலரும் இதில் பாதிக்கப்படுவதால் விவகாரம் சைபர் கிரைம் வரை சென்றிருக்கிறது.

இனி பிங்க் வாட்ஸ் அப் என்ற பெயரிலோ அல்லது வேறு ஏதேனும் பெயரிலோ ஆப்களை தரவிறக்கம் செய்ய சொல்லி லிங்க் வந்தால் அவற்றை பதிவிறக்கம் செய்ய வேண்டாம். மற்றவர்களுக்குப் பகிரவும் வேண்டாம் என்று சைபர் கிரைம் கடுமையாக எச்சரிக்கிறது. அடையாறு துணை ஆணையர் விக்கிரமன் தனது டுவிட்டர் மூலமாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

 

Tags :

Share via