இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் : சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

by Editor / 21-04-2021 07:48:32pm
இருசக்கர வாகனங்களுக்கு வேகக் கட்டுப்பாட்டு  கருவி கட்டாயம் : சென்னை உயர்நீதிமன்றம்உத்தரவு

 

 

இருசக்கர வாகனங்களுக்கும் வேகக் கட்டுப்பாட்டு கருவி கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாலை விபத்துக்களில் உயிரிழப்பு அதிகம் நிகழக் காரணம், வாகனங்களில் அதிவேகமாக செல்வதே காரணம் என்றும், இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடச் சொல்லி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. 
 வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், அப்துல குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு பல்வேறு உத்தரவுகளை அதிரடியாக பிறப்பித்தனர். அதாவது, பள்ளி பாடத் திட்டங்களில் சாலை போக்குவரத்து விதிகளை கற்பிக்கும் வகையிலான நடவடிக்கைகளை மத்திய, மாநி அரசுகள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், வாகனங்களை தயாரிக்கும் போதே வேகக் கட்டுப்பாட்டு கருவிகளை இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்கள் பொருத்த வேண்டும். எக்ஸ்பிரஸ் சாலையில் 120 கி.மீ. வேகத்தில் செல்லலாம் என்னும் உத்தரவை மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் ஆணையிட்டது.


 
 

 

Tags :

Share via