பாகிஸ்தான்  ஓட்டலில் குண்டு வெடிப்பு

by Editor / 22-04-2021 05:28:55pm
பாகிஸ்தான்  ஓட்டலில் குண்டு வெடிப்பு

 


பாகிஸ்தான் பலுசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஓட்டலின் கார் பார்க்கிங்கில் குண்டு வெடிப்பு ஏற்பட்டது .இந்த குண்டு வெடிப்பில் 12 காயமடைந்துள்ளனர் மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளனர்
இந்த ஓட்டலில் சீன தூதர் உள்பட சீனாவின் உயர் மட்ட அதிகாரிகள் அடங்கிய 4 பேர் கொண்ட குழுவினர் தங்கியிருந்துள்ளனர். ஆனால்,குண்டு வெடிப்பு சம்பவத்தின் போது சீன தூதர் அந்த ஓட்டலில் இல்லை என்று கூறப்படுகிறது.இது ஒரு பயங்கரவாத செயல் என்று பாகிஸ்தான் உள்துறை மந்திரி ஷேக் ரஷித் அகமது தெரிவித்துள்ளார்.இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற பாகிஸ்தானி தலிபான் அமைப்பு இது தற்கொலைப்படை தாக்குதல் என தெரிவித்துள்ளது.

 

Tags :

Share via