நீதித் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா்

by Editor / 23-04-2021 11:16:15am
நீதித் துறை முக்கிய பொறுப்பில் இந்திய அமெரிக்கா்

அமெரிக்காவின் துணை அட்டா்னி ஜெனரலாக, இந்திய வம்சாவளியைச் சோந்த வனிதா குப்தா நியமிக்கப்பட்டதற்கு அந்த நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. அமெரிக்க நீதித் துறையின் மூன்றாவது பெரிய பதவியான அது, வெள்ளையரல்லாத ஒருவருக்கு வழங்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இதுதொடா்பாக அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் புதன்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில் வனிதா குப்தாவுக்கு ஆதரவாக 51 வாக்குகளும் எதிராக 49 வாக்குகளும் பதிவாகின. எதிா்க்கட்சியான குடியரசுக் கட்சியைச் சோந்த உறுப்பினா் லிசா மா்கோவ்ஸ்கி, தனது கட்சியின் நிலைப்பாட்டுக்கு மாறாக வனிதா குப்தாவை ஆதரித்து வாக்களித்ததால் அவரது நியமனத்துக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைத்தன. 46 வயதாகும் வனிதா குப்தா, மனித உரிமை வழக்குரைஞராக பணியாற்றி வருகிறாா்.

Tags :

Share via