வீட்டு விஷேசங்களின் போது பூஜைக்கு மாவிலை பயன்படுவதும், தோரணம் கட்டுவது ஏன்?

by Editor / 24-07-2021 11:24:19am
வீட்டு விஷேசங்களின் போது பூஜைக்கு மாவிலை பயன்படுவதும், தோரணம் கட்டுவது ஏன்?

பல சடங்கு சம்பிரதாயங்களை பின்பற்றக்கூடிய நாம், மாவிலை வீட்டு வாசலில் தோரணமாகவும், பூஜைகளின் போதும் பயன்படுத்தப்படுகிறது. மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.

அதே போல் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதை தடுக்க முடியும். நம் வாழ்நாளில் பல விழாக்கள், பண்டிகை, வீட்டு விஷேசங்களைப் பார்த்திருப்போம். வீட்டு விஷேசங்களின் போது பின்பற்றப்படக்கூடிய சடங்குகளை நாமும் செய்திருப்போம்.

அந்த சடங்கு, சம்பிரதாயங்கள் நாம் இன்றும் ஏன் செய்கிறோம் என்று கூட அறிந்து கொள்ளாமல் பின்பற்றி வந்திருப்போம். அதில் ஒன்று தான் விஷேசங்களின் போது மாவிலை கட்டுவது என்ற செயல். 

* நம் வீட்டில் நடக்கக்கூடிய விழாக்கள், விஷேசங்களுக்கு நாம் அழைப்பு விடுத்ததன் பேரில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வருவார்கள். வருபவர்களில் சிலருக்கு உடல் உபாதைகள் இருப்பினும் அவர்களை நாம் வரக்கூடாது என தடுக்க முடியாது. ஆனால் அப்படி வருபவர்களை தடுக்க முடியாவிட்டாலும், அவர்கள் வருவதால் ஏற்படக்கூடிய நோய் தொற்றுக்களைத் தடுக்க வேண்டியது விஷேசத்திற்கு அழைத்த நம்முடைய கடமையாகும்.

* விழாக்களின் போது விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகமாக வருவார்கள். அதனால் காற்றில் அசுத்தம் அதிகரிக்கக்கூடும். இதன் காரணமாக அங்கு வரக்கூடிய குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. அப்படிப்பட்ட பிரச்சினைகளைத் தடுக்க இயற்கை அளித்த வரப்பிரசாதம் தான் ‘மாவிலை’ தோரணம் ஆகும்.

* விழாக்களில் பயன்படுத்தக்கூடிய ஒவ்வொரு பொருட்களும் இறைவனின் அருள் தரக்கூடியதாக இருக்கிறது. அதில் மாவிலையில் மகாலட்சுமி வாசம் செய்வதாக நம்பப்படுகிறது. அதன் காரணமாக பூஜையின் போது கலசம் வைத்து பூஜையின் முடிவில் மாவிலை மூலம் கலச நீரை தெளிப்பது, கலச நீரை அருந்தவும் செய்வார்கள். இதனால் ஆரோக்கியம் மேம்படும். மாவிலை போடப்பட்ட கலச நீரில் பிராண வாயுவின் அளவு அதிகமாக இருக்கும்.

* மாவிலை தோரணம் கட்டுவதால் வீட்டில் இருக்கும் வாஸ்து தொடர்பான பிரச்னைகள் கட்டுக்குள் வரும்.

* அதே போல் வீட்டு வாசலில் மாவிலை தோரணம் கட்டுவதால் எதிர்மறை சக்திகள் வீட்டில் நுழைவதை தடுக்க முடியும்.

* மாவிலை தோரணம் வீட்டில் இருக்கும் காற்றினை சுத்தம் செய்யக்கூடிய ஏர் ப்யூரிஃபயர் வேலையைப் பார்ப்பதால் உடல் ஆரோக்கியம் மேம்படுத்தக்கூடியதாக இருக்கிறது.

* அதே போல மாவிலை தோரணம் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது. அதனால் மனிதர்கள் வெளியிடும் கரியமில வாயுவை உட்கிரகித்து, சுற்றுச்சூழலைச் சீர் செய்வதாக இருக்கிறது.

* விழாக்களின் போது மாவிலை தோரணம் கட்டுவதால், விழாவுக்கு வரும் பக்தர்களின் எதிர்மறை எண்ணங்கள் நீக்கி புத்துணர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். காய்ந்த மாவிலையாக இருந்தாலும் அதன் சக்தி குறைவது இல்லை.

* இப்படி பல்வேறு சக்திகளைக் கொண்ட, ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடிய மாவிலை தோரணம் கட்டுவதை விடுத்து, கடைகளில் கிடைக்கும் அலங்கார மாவிலை தோரணத்தை கட்டுவதால் என்ன பலன் கிடைக்கும்.
 

வீட்டு விஷேசங்களின் போது பூஜைக்கு மாவிலை பயன்படுவதும், தோரணம் கட்டுவது ஏன்?
 

Tags :

Share via