"கொரோனாவில் இருந்து மீண்டவர்கள்   பிளாஸ்மா தானம் செய்யுங்கள்!" - சச்சின்

by Editor / 24-04-2021 04:52:09pm


 

கொரோனா பாதித்தவர்களுக்கு உதவும் வகையில் பிளாஸ்மா ரத்த தானம் செய்யுங்கள் என்று இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளைகொண்டாடினார்.  ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளை அவரது ரசிகர்கள் வாழ்த்துகளுடன் அவரின் தலைச் சிறந்த இன்னிங்ஸ்களை நினைவுக் கூறுவார்கள். இந்நிலையில் தனது பிறந்தநாளுக்காக சச்சின் டெண்டுல்கர் தன்னுடைய ட்விட்டர் பதிவில் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் "உங்களின் அனைவரது வாழ்த்துகளுக்கும் நன்றி. உங்களின் வாழ்த்துகள் இந்த நாளை மேலும் சிறப்பாக்கியது. அதற்கு எப்போதும் உண்மையுள்ளவனாக இருப்பேன். கடந்த மாதம் எனக்கு மிகவும் கடினமாக இருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவர்களின் அறிவுறைப்படி நான் 21 நாள்கள் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். கொரோனாவில் இருந்து மீண்டு வர மருத்துவர்கள் எனக்கு பேருதவியாய் இருந்தார்கள். உங்களின் பிரார்த்தனைகளும் எனக்கு துணையாக இருந்தது" என்றார் சச்சின்.
மேலும் "கடந்தாண்டு நான் பிளாஸ்மா தானம் செய்யும் மையத்தை தொடக்கி வைத்தேன். இந்நேரத்தில் நான் ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் தயவு செய்து பிளாஸ்மா தானம் செய்யுங்கள். அது தேவைப்படும் நோயாளிகளுக்கு பேருதவியாக இருக்கும். எனவே பிளாஸ்மா தானம் செய்யுங்கள். நானும் செய்ய இருக்கிறேன், மருத்துவர்கள் எப்போது சொல்கிறார்களோ அப்போது பிளாஸ்மா தானம் செய்யவுள்ளேன்" என்றார் சச்சின் டெண்டுல்கர்.

 

Tags :

Share via