மேஷம் ராசி

by Admin / 01-04-2024 05:35:32pm
மேஷம் ராசி

சூரியன் 12ல் இருப்பதால் எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல் ஏற்படும். தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். வேள்விப் பணிகளில் ஈடுபாடு உண்டாகும். செவ்வாய் 11ல் இருப்பதால் திட்டமிட்ட பணிகள் நிறைவேறும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். புதன் 12ல் இருப்பதால் போட்டி மனப்பான்மையை குறைத்துக் கொள்வது நல்லது. புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். சுக்கிரன் 11ல் இருப்பதால் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன் கிடைக்கும். பங்குனி 19 முதல் சுக்கிரன் 12ல் இருப்பதால் எதிர்பாராத செலவுகள் உண்டாகும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு மேம்படும். குரு ராசியில் இருப்பதால் பணிமாற்றம் சார்ந்த முயற்சிகள் கைகூடிவரும். சனி 11ல் இருப்பதால் இனம்புரியாத புதுவிதமான சிந்தனைகளும், ஆசைகளும் உண்டாகும். ராகு 12ல் இருப்பதால் கணவன், மனைவிக்கிடையே புரிதல் அதிகரிக்கும். கேது 06ல் இருப்பதால் எதிராக செயல்பட்டவர்கள் விலகி செல்வார்கள். 

 

Tags :

Share via