மேஷம்

by Admin / 17-11-2018
மேஷம்

மேஷம் (11.11.18 முதல் 17.11.18 வரை)

மேஷம்

நிதானத்தைக் கடைபிடிக்க வேண்டியது அவசியம். பதற்றம், காரியத்தடை இருக்கும். முக்கியமான பணிகளில் தக்க துணையோடு செயல்படுவது நன்மை தரும். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் இணைந்திருக்கும். சேமிப்பு உயர்வடையும். வழக்கு விவகாரங்கள் வெற்றி பெறும். பிரயாணத்தில் நட்பு வட்டம் விரிவடையும். தகவல் தொடர்பில் தோன்றும் இடைஞ்சலால் உறவினர்களோடு வீண் மனஸ்தாபம் உண்டாகும். பிள்ளைகள் சுறுசுறுப்பாவர். மூட்டு, முதுகு, இடுப்பு வலி பிரச்னைகளால் உடல்நிலையில் சிரமம் காண நேரிடும். வயதில் மூத்தவர்களுக்கு பணிவிடை செய்வீர்கள். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் மற்ற பணியாளர்களை சார்ந்திருக்க நேரும். கலைத்துறையினர் தகுந்த உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டி வரும். மாணவர்கள் மொழிப்பாடங்களில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். தக்க துணையோடு செயல்பட வேண்டிய வாரம் இது. வழிபாடு: அர்த்தநாரீஸ்வரரை வழிபடுங்கள்.