ரிஷபம்

by Admin / 17-11-2018
ரிஷபம்

11.11.18 முதல் 17.11.18 வரை

ரிஷபம்

எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்துமுடிக்க போராட வேண்டியிருக்கும். செயல்களில் வேகத்தோடு விவேகமும் வெளிப்படும். ஓய்வில்லாமல் செயல்பட்டால் மட்டுமே போட்டியாளர்களை சமாளிக்க முடியும். குடும்பத்தில் சலசலப்பு நிலவும். முடிந்த வரை கடன் கொடுப்பதைத் தவிர்க்கவும். பேச்சில் கவனம் தேவை. உடன் பிறந்தாரோடு வீண் மனஸ்தாபம் உருவாகலாம். பிள்ளைகளின் செயல்கள் மகிழ்ச்சி தரும். டென்ஷன் காரணமாக உடல்நிலையில் சிரமம் தோன்றலாம். தம்பதியராக இணைந்து செயல்படும் பணிகளில் வெற்றி காண்பீர்கள். தத்துவ சிந்தனைகள் மனதில் அவ்வப்போது இடம்பிடிக்கும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் போட்டியான சூழலைக் காண்பர். மாணவர்கள் எழுத்து வேகத்தினை உயர்த்திக் கொள்ள தீவிரப் பயிற்சி மேற்கொள்ள வேண்டியது அவசியம். கலைத்துறையினர் கடும் போட்டியை சந்திப்பர். முயற்சியால் வெற்றி பெறும் வாரமிது. வழிபாடு: சிவாலய வழிபாடு நன்மை தரும்.