மிதுனம்

by Admin / 17-11-2018
மிதுனம்

11.11.18 முதல் 17.11.18 வரை

மிதுனம்

எடுத்த காரியங்கள் எளிதில் முடியாமல் இழுபறி தரும். நம்பிக்கைக்குரியவர்கள் கூட எதிராக செயல்படுவர். குழப்பம் இருக்கும். சந்தேகம் தோன்றி மறையும். ஞாபகமறதியால் இழப்பினை சந்திப்பீர்கள். நண்பர்களை நம்பி இறங்கிய காரியங்களில் தடை காண்பீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். பணவரவு சீராக இருந்து வரும். வித்தியாசமான முயற்சிகள் விரயம் தரும். அண்டை அயலாருக்கு உதவப்போய் தர்மசங்கடத்திற்கு ஆளாவீர்கள். உறவினர்கள் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்தினை நிறைவேற்ற கூடுதலாக செலவழிக்க வேண்டியிருக்கும். உடல்நிலையில் கவனம் அவசியம். தம்பதியருக்குள் கருத்து வேறுபாடு தோன்றலாம். பணிக்குச் செல்வோர் கூடுதல் பணிச்சுமையைக் காண்பர். கலைத்துறையினரின் கற்பனைத்திறன் கூடும். மாணவர்கள் கணிதப் பாடத்தினை சற்று சிரமமாக உணர்வார்கள். சோதனைகளைக் கடந்து வெற்றி காண வேண்டிய வாரம் இது. வழிபாடு: விநாயகரை வணங்கி வாருங்கள்.