டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க போட்டா போட்டி!

by Editor / 25-04-2021 10:52:31am
டாஸ்மாக் கடைகளில் மதுவாங்க போட்டா போட்டி!

திருப்பூர் மாநகரின் பல்வேறு டாஸ்மாக் கடைகளிலும் மது வாங்க ஏராளமானோர் திரண்டனர். யூனியன் மில் சாலை, அவிநாசி சாலை, கல்லூரி சாலை, தாராபுரம் சாலை ஆகிய பகுதிகளில் கூட்டம் அலைமோதியது. பனியன் தொழில் நிறுவனங்களில் வாரச் சம்பளம்பெற்றுக்கொண்டு திரும்பிய பலரும், மது வாங்க கடைகளில் திரண்டனர். கரோனா தடுப்பு நடவடிக்கைகள், டாஸ்மாக் கடைகளில் தீவிரமாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான கடைகளில் கூட்டம் முண்டியடித்ததால் தொற்று பரவலுக்கு வழிவகுக்கும் வகையில் இருந்தது. திருப்பூர் கல்லூரி சாலையில் கொங்கணகிரி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அதிக அளவில் கூட்டம் திரண்டதால், மது வாங்க கூட்டமாக நின்றிருந்தவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அரசு அதிகாரிகள் மற்றும் போலீஸார் இதனை கண்டுகொள்ளவில்லை என, சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டினர்

Tags :

Share via