கடகம்

by Admin / 17-11-2018
கடகம்

11.11.18 முதல் 17.11.18 வரை

சுறுசுறுப்பாக, மகிழ்ச்சித் துள்ளலோடு செயல்படுவீர்கள். எந்த ஒரு காரியத்தையும் தள்ளிப் போடாமல் உடனடியாக செய்து முடித்துவிட நினைப்பீர்கள். குடும்பத்தில் சலசலப்பும் கலகலப்பும் இணைந்திருக்கும். வரவு சிறப்பாக அமையும். குடும்பத்திற்குத் தேவையான ஃபர்னிச்சர்கள் புதிதாக வாங்குவீர்கள். தங்க, வெள்ளி பொருட்கள் வாங்க கால நேரம் சாதகமாக அமையும். வீட்டை அழகுபடுத்துவதில் சிறப்பு கவனம் கொள்வீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வதில் மனமகிழ்ச்சி காண்பீர்கள். உறவினர்களின் சந்திப்பு புதிய உற்சாகத்தைத் தரும். பிள்ளைகளின் விருப்பங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் மனநிலையைப் புரிந்து கொள்வதில் சிரமம் காண நேரிடும். வேலைக்குச் செல்வோர் புதிய பிரச்னையை எதிர்கொள்வர். கலைத்துறையினர் பாராட்டு பெறுவர். மாணவர்கள் வகுப்பில் முன்னிலை பெறுவார்கள். சுறுசுறுப்பு நிறைந்த வாரம் இது. வழிபாடு: விஷ்ணு துர்கையை வணங்கி வாருங்கள்.

Share via