தமிழக அரசின் ஆலோசனைக்கு பிறகே ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது - மத்திய அரசு

by Editor / 26-04-2021 04:20:05pm
தமிழக அரசின் ஆலோசனைக்கு பிறகே ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது - மத்திய அரசு

தமிழக அரசின் ஆலோசனைக்கு பிறகே ஆந்திரா, தெலுங்கானாவுக்கு ஆக்சிஜன் அனுப்பப்பட்டது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் சங்கரநாராயணன் உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளார். தமிழக அரசிடம் தெரிவிக்காமலேயே வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் வழங்கப்பட்டதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறி இருந்தார். வெளிமாநிலங்களுக்கு ஆக்சிஜன் அனுப்புவது மற்றும் ரெம்டேசிவிர் மருந்து பற்றாக்குறை தொடர்பாக ஐகோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதுடன் உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளன. வரும் மே மாதத்தின் முதல் இரண்டு வாரங்கள் இன்னும் நிலைமை மோசமடையும் என்று சுகாதாரத்துறை தெரிவிக்கிறது. இந்த காலகட்டத்தில் மிக அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் வரக்கூடும்.

கொரோனா இரண்டாவது அலை பாதிப்பு, அதிகமான நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தேவையை உருவாக்குகிறது என செய்திகள் காட்டுகின்றன. வட மாநிலங்கள் பலவற்றிலும் மருத்துவமனை மற்றும் ஆக்சிஜன் கட்டமைப்புகள் இல்லாததால் கொரோனா சிகிச்சை தருவதிலும், இதர நோய்களுக்கு சிகிச்சை தருவதிலும் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஆனால், தமிழகத்தில் உற்பத்தியாகும் மருத்துவ ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு திருப்பி விடும் நடவடிக்கையை மத்திய அரசு தன்னிச்சையாக மேற்கொள்வதாக தகவல்கள் வெளியானது. ஸ்ரீபெரும்புதூர் ஆலையில் இருந்து ஆக்சிஜன் திருப்பிவிடுவதை எதிர்த்துள்ள தமிழக முதல்வர், தமிழகத்திலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருக்கும் அபாயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags :

Share via