துலாம்

by Admin / 17-11-2018
துலாம்

11.11.18 முதல் 17.11.18 வரை

துலாம்

மனதில் மகிழ்ச்சி ததும்பும். எதிலும் திறம்பட செயல்படுவீர்கள். பேச்சில் அதிகாரம், சாதுர்யத்தை வெளிப்படுத்தி காரியங்களை சாதித்துக் கொள்வீர்கள். சிறப்பான வரவு உண்டு. உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் கலகலப்பான சூழல் நிலவும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. சூடான உணவுகளை ருசிப்பதில் ஆர்வம் கூடும். அண்டை அயலாரோடு மனஸ்தாபம் உண்டாகலாம். குடியிருக்கும் வீட்டை சுத்தமாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் தடை காண்பீர்கள். பிள்ளைகளின் செயல்கள் உங்கள் கவுரவத்தை உயர்த்தும். வேலைக்குச் செல்வோர் பேச்சுத்திறமை மூலம் தங்கள் பணிகளை எளிதாக்கிக் கொள்வர். கலைத்துறையினர் புதிய வாய்ப்பினைப் பெறுவர். மாணவர்கள் பாடங்களைப் புரிந்துகொள்வதை எளிதாக உணர்வார்கள். மனதில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும் வாரம் இது. வழிபாடு: காமாக்ஷி அன்னையை வழிபடுங்கள்