விருச்சிகம்

by Admin / 17-11-2018
விருச்சிகம்

11.11.18 முதல் 17.11.18 வரை

பணிகளில் வேகம் கூடும். சம்பந்தமில்லாத பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்க்கவும். குடும்பத்தில் அமைதி நிலவும். வரவு சீராக இருக்கும். எதிலும் அதிகம் பேசாமல் அமைதி காப்பது நல்லது. அண்டை அயலாருக்கு உதவுவதைக் கவுரவமாக எண்ணுவீர்கள். உறவினர்கள் வழியில் கலகத்தை சந்திக்க நேரிடும். பிள்ளைகளின் செயல்கள் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும். நரம்புத் தளர்ச்சி, இரத்த சோகை போன்ற பிரச்னைகளால் அடிக்கடி உடல் சோர்வடையும். வாழ்க்கைத்துணை உங்கள் மனதினை முற்றிலுமாக புரிந்து வைத்திருப்பார். கவுரவ செலவுகள் கூடும். பெரியோருக்கு பணிவிடை செய்வீர்கள். கலைத்துறையினர் அதிக அலைச்சலைக் காண்பர். பணிக்குச் செல்வோர் அலுவலகத்தில் மேலதிகாரியோடு கருத்து வேறுபாட்டினை சந்திக்க நேரலாம். தற்காப்போடு செயல்பட வேண்டிய வாரம் இது. வழிபாடு: சுவாமி ஐயப்பனை வணங்கி வாருங்கள்.

Share via