கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து திருநங்கைகள் ஏமாற்றம் 

by Editor / 28-04-2021 07:13:45pm
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் திருவிழா ரத்து திருநங்கைகள் ஏமாற்றம் 

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையை அடுத்துள்ள கூவாகம் கிராமத்தில் கூத்தாண்டவர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 15 நாட்களுக்கும் மேல் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு அரவாண் களப்பலியும், திருநங்கைகள் திருமணமும், விதவை கோலம் பூணுவதும் நிகழ்கிறது. இந்த விழாவில் பங்கேற்க சித்திரை மாதம் பவுர்ணமி தினத்தில் தமிழகம், இந்தியா மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த லட்சகணக்கான பக்தர்கள் மற்றும் திருநங்கைகள் பங்கேற்கும் இந்த திருவிழாவில் திருநங்கைகள் மணப்பெண் போல தங்களை அலங்கரித்து கொண்டு அரவானை வணங்கி கோவில் பூசாரியின் மூலம் தாலி கட்டி கொண்டு இரவு முழுவதும் கும்மியடித்து ஆடிப்பாடி மகிழ்வார்கள். தேரோட்டம் முடிந்த பின்னர் அதிகாலையில் தங்களது தாலியை துறந்து விதவை கோலத்தில் சொந்த ஊருக்கு திரும்பி செல்வார்கள்.
கொரானா கட்டுப்பாடுகள் காரணமாக கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் கூவாகம் கூத்தாண்டவர் கோவில் திருவிழா ரத்து செய்யப்பட்டது. இதனால் ஏமாற்றமடைந்த பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திருநங்கைகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மணப்பெண்களை போல் தங்களை அலங்கரித்துக்கொண்டு கோவிலுக்கு வந்தனர். பூட்டபட்டிருந்த கோவிலின் வாசலில் கற்பூரம் ஏற்றி தேங்காய் உடைத்தும் வழிபட்டு சென்றனர்.

 

Tags :

Share via