மகரம்

by Admin / 17-11-2018 / 0 comments
மகரம்

11.11.18 முதல் 17.11.18 வரை

மகரம்

வளர்ச்சிப் பாதையில் பயணிப்பீர்கள். விவேகத்துடன் விரைவாகவும் செயல்பட்டு கவுரவத்தை கூட்டிக் கொள்வீர்கள். எதிர்கால நலன் கருதி புதிய செயல் திட்டங்களில் இறங்க நினைப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நகைச்சுவை மூலம் அடுத்தவர் மனம் கவர்வீர்கள். நண்பர் ஒருவரிடம் ஒப்படைத்திருந்த காரியங்கள் முடிவிற்கு வரும். உறவினர்களின் இல்ல விசேஷங்களில் முக்கியப் பங்காற்றுவீர்கள். பிள்ளைகளின் வாழ்வியல் தரம் உயர்வடையும். வாழ்க்கைத்துணையின் பணிகளுக்கு உறுதுணையாக செயல்படுவீர்கள். அநாவசிய செலவுகள் குறையும். வயதில் மூத்தவர் ஒருவரின் ஆலோசனைகள் உங்கள் முன்னேற்றத்திற்குத் துணைநிற்கும். வேலைக்குச் செல்வோர் அலுவலகத்தில் தங்களின் நிர்வாகத் திறமையின் மூலம் உயர்வு காண்பர். மாணவர்கள் கல்வியில் உயர்வு காண்பர். கலைத்துறையினரின் சிந்தனைகளும், செயல்திட்டங்களும் உயர்விற்கு வழிவகுக்கும். கவுரவம் உயரும் வாரம் இது. வழிபாடு: அண்ணாமலையாரை வழிபட்டு வரவும்.