நண்பரை கொன்ற இந்திய இளைஞர்!

by Editor / 29-04-2021 12:31:00pm
நண்பரை கொன்ற இந்திய இளைஞர்!

இந்தியாவை சேர்ந்த மன்ப்ரீத் என்ற 21 வயது மாணவர் விசா மூலம் பிரிட்டன் வந்துள்ளார். இவருக்கு பல்ஜித் சிங் என்ற 37 வயது நபருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அதன் பிறகு இருவரும் ஒரே இடத்தில் தங்கியுள்ளனர். இதனையடுத்து ஒரு நாள் மது அருந்தி கொண்டிருந்தபோது இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் பல்ஜித், தன் நண்பரான மன்பிரீத்தை அவரது இடத்திலிருந்து வெளியேற்றியுள்ளார். அதன்பின்பு லண்டனில் உள்ள ஹயீஸ் ரயில் நிலையத்திற்கு அருகே இருக்கும் சாலையில் இருவரும் கடந்த வருடம் ஏப்ரல் 25ஆம் தேதியன்று சந்தித்துள்ளனர். அப்போது மன்பிரீத், அவரது நண்பர் ஜஸ்பிரீத்துடன் வந்துள்ளார். அப்போதும் இருவரும் மது போதையில் இருந்துள்ளனர். இதனால் மீண்டும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் மன்ப்ரீத், பல்ஜித்தின் கழுத்தை நெரித்துள்ளார். ஜஸ்பிரீத், இருவரையும் விலக்க முயற்சித்தும் முடியாமல் போனது. இதில் பல்ஜித் உயிரிழந்ததும், மன்ப்ரீத் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும், அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்தது. இதனைத்தொடர்ந்து, மன்ப்ரீத் கைது செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து கைப்பற்றப்பட்ட பல்ஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவரது கழுத்து எலும்பு மற்றும் விலா எலும்புகள் முறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஐசில்ஒர்த் கிரவுன் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்றது. இதில் மன்ப்ரீத் மீதுள்ள குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Tags :

Share via