கும்பம்

by Admin / 17-11-2018
கும்பம்

11.11.18 முதல் 17.11.18 வரை

கும்பம்

மிகுந்த உத்வேகத்துடன் அடுத்தவர்கள் செய்யத் தயங்கும் காரியத்தையும் அநாயாசமாக செய்து முடிப்பீர்கள். செயல்களில் வேகத்தோடு, விவேகமும் இருக்கும். யாரை, எவ்விதம் வேலை வாங்கவேண்டும் என்ற கலையை அறிந்திருப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குடும்பத்தினரோடு உல்லாசப் பயணம் செல்லும் வாய்ப்பு உண்டு. சந்தோஷம் தரும் செலவுகள் கூடும். உணவினில் சுவையை விட ஆரோக்கியத்திற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். சுற்றியுள்ளோருக்கு உதவி செய்வீர்கள். எனினும் இயலாதவர்களுக்கு உதவுவதே நல்லது என்பதையும் புரிந்து கொள்ளுங்கள். உறவினர்களால் தேவையற்ற கலகம் உருவாகலாம். பிள்ளைகளின் ஆலோசனைகளைக் கண்டு பிரமிப்பீர்கள். ஆன்மிகம் சார்ந்த சந்தேகங்கள் அவ்வப்போது மனதினைக் குழப்பும். வேலைக்குச் செல்வோர் உடன் பணிபுரிவோர் துணையோடு வெற்றி காண்பர். கலைத்துறையினர் பொதுசேவையில் ஈடுபட நேரம் கூடி வரும். மாணவர்கள் எழுத்து வேகம் உயரக் காண்பார்கள். உறுதியான செயல்பாடுகளால் வெற்றி காணும் வாரம் இது. வழிபாடு: நரசிம்மரை வழிபடுங்கள்.