பிரபல நடிகர் மரணம்!

by Editor / 30-04-2021 11:13:46am
பிரபல நடிகர் மரணம்!

பிரபல நடிகர் செல்லதுரை (84) உடல்நலக்குறைவால் உயிரிழந்துள்ளார். வயது முதிர்வால் ஏற்பட்ட உடல்நலக்குறைவால் தனது வீட்டிலேயே செல்லதுரை சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மாலை அவர் இறைவனடி சேர்ந்தார். இவர் ராஜா ராணி, கத்தி, தெறி உள்ளிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 17ம் தேதி நடிகர் விவேக், இன்று காலை இயக்குனர் கே.வி.ஆனந்த், தற்போது நடிகர் செல்லதுரை என அடுத்தடுத்து நிகழும் மரணங்கள் தமிழ் திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் செல்லதுரையின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

 

Tags :

Share via