வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

by Admin / 24-11-2018
வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆன்டிகுவாவில் நடந்த முதல் அரை இறுதியில் நடப்பு சாம்பியன் வெஸ்ட் இண்டீசுடன் மோதிய ஆஸ்திரேலிய அணி, 71 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. டாசில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பந்துவீச, ஆஸ்திரேலியா 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன் குவித்தது. அலிஸா ஹீலி அதிகபட்சமாக 46 ரன் (38 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். கேப்டன் மெக் லேன்னிங் 31 ரன் (39 பந்து, 2 பவுண்டரி), கார்ட்னர் 14, ரச்சேல் ஹெய்ன்ஸ் 25* ரன் (15 பந்து, 4 பவுண்டரி) விளாசினர். அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 17.3 ஓவரில் வெறும் 71 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. கேப்டன் சாரா டெய்லர் 16 ரன் (28 பந்து, 1 பவுண்டரி) எடுக்க, மற்ற வீராங்கனைகள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் அணிவகுத்தனர்.

வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலிய பந்துவீச்சில் பெர்ரி, கிம்மின்ஸ், கார்ட்னர் தலா 2 விக்கெட், ஷுட். மோலினியூக்ஸ், வாரிஹம் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அலிஸா ஹீலி சிறந்த வீராங்கனை விருது பெற்றார். ஆஸி. அணி தொடர்ந்து 5வது முறையாக ஐசிசி உலக டி20 பைனலுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த அணி ஏற்கனவே 3 முறை உலக கோப்பையை வென்றுள்ளது.