கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி  ஏற்படுத்தி தரடுவிட்டர் கணக்கு தொடக்கம்

by Editor / 30-04-2021 07:52:28pm
கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதி  ஏற்படுத்தி தரடுவிட்டர் கணக்கு தொடக்கம்

 


தமிழ்நாட்டில் கொரோனா தொற்று நோயாளிகளுக்கு தேவையான படுக்கைகள், மருத்துவ ஆக்சிஜன் சிலிண்டர்களை பொது மக்கள் எளிதாக பெற தமிழ்நாடு அரசு https://twitter.com/104GoTN என்ற பெயரில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையத்தைத் தொடங்கியுள்ளது.
இதன்மூலம் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனைகளில் காலியாக உள்ள படுக்கைகளை அறியவும் வெண்டிலேட்டர், மருத்துவ ஆக்சிஜன் குறித்து உதவிகளைக் கோரவும் முடியும்.
ஏற்கெனவே ஆக்சிஜன் உதவி பெற 104 என்ற இலவச உதவி எண்ணை அறிமுகப்படுத்திய தமிழ்நாடு அரசு https://twitter.com/104GoTN என்ற பெயரில் ஒரு ட்விட்டர் கணக்கினை தொடங்கியுள்ளது.
இந்த ட்விட்டர் கணக்கில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கை, ஆச்சிஜன் வசதி குறித்து மக்கள் யார் வேண்டுமானாலும் கோரிக்கை விடுக்கலாம்.https://twitter.com/104GoTN என்ற ஹேஷ்டேக்கை கிளிக் செய்து இதன் மூலம் உதவி கோரலாம்.காலியாக உள்ள படுக்கைகள் வசதி, மருத்துவ ஆக்சிஜன் இருப்பு உள்ளிட்ட தகவல்களை மருத்துவமனைகளும் வழங்கலாம்.
ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மையம் தேவைப்படுவோருக்கு தகவல் வழங்கி உரிய ஏற்பாடுகளை செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.மருத்துவமனைகளும், மக்களும் இந்த வசதியை பயன்படுத்திக்கொள்ள தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது.தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள '104GoTN' கட்டுப்பாட்டு அறையை சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தார்.

 

Tags :

Share via