வாக்கு எண்ணிக்கைக்கு   35,836 போலீசார் பாதுகாப்பு-  சத்யபிரதா சாகு

by Editor / 01-05-2021 05:48:50pm
வாக்கு எண்ணிக்கைக்கு   35,836 போலீசார் பாதுகாப்பு-  சத்யபிரதா சாகு

 

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை  நடைபெற உள்ள நிலையில், பல்வேறு முன்னேற்பாடு பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடங்களில் 35,836 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட அலுவலகர்களுக்கு பதிலாக மாற்றும் அலுவலர்கள் நியமிக்கப்படுவர் என்றும் கூறியுள்ளார் மேலும்,  தமிழகத்தில் 5,64,253 தபால் வாக்குகள் பெறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வாக்கு எண்ணும் மையங்களில் 2 மணி நேரத்திற்கு ஒருமுறை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படும் எனவும் தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via