ஓய்வு பெற்றார் டிரோக்பா

by Admin / 24-11-2018
ஓய்வு பெற்றார் டிரோக்பா

ஐவரி கோஸ்ட் கால்பந்து நட்சத்திரம் டிரோக்பா கால்பந்து அரங்கிலிருந்து விடை பெற்றார்.

ஓய்வு பெற்றார் டிரோக்பா

ஐவரி கோஸ்ட் கால்பந்து கேப்டன் டிடியர் டிரோக்பா, 40. ஐவரி கோஸ்ட் சார்பில் அதிக கோல் அடித்தவர்கள் (105 போட்டி, 65 கோல்) பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். செல்சி கிளப் அணிக்காக 381 போட்டியில் 164 கோல் அடித்துள்ளார். பிரிமியர் லீக் மற்றும் எப்.ஏ., சாலஞ்ச் கோப்பை தொடரில் நான்கு முறை கோப்பை வென்ற அணியில் இடம்பிடித்துள்ளார். சமீபகாலமாக, அமெரிக்காவின் போனிக்ஸ் ரைசிங் அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில், சர்வதேச கால்பந்து அரங்கிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். இதன் மூலம், 20 ஆண்டு கால்பந்து வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது குறித்து டிரோக்பா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ கால்பந்து அரங்கிலிருந்து விடை பெறுகிறேன். இதுவரை எனக்கு ஆதரவு தந்த அணி நிர்வாகம், சக வீரர்கள், பயிற்சியாளர்கள், ரசிகர்களுக்கு நன்றி. கடினமாக உழைத்தால் கனவுகளை நனவாக்கலாம்,’’ என தெரிவித்துள்ளார்.