கன்னியாகுமரி மக்களவை  இடைத்தேர்தல் : காங் வேட்பாளர்  விஜய் வசந்த் வெற்றி 

by Editor / 02-05-2021 05:54:52pm
கன்னியாகுமரி மக்களவை  இடைத்தேர்தல் : காங் வேட்பாளர்  விஜய் வசந்த் வெற்றி 


கன்னியாகுமரி மக்களவை இடைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் வேட்பாளர் வசந்தகுமார் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார். 
இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுடன் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பாக மறைந்த எம்பி வசந்தகுமாரின் மகன் விஜய் வசந்த் வேட்பாளராக களம் இறங்கினார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் பொன் ராதாகிருஷ்ணன் களமிறங்கினார்.இந்நிலையில்,  வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் விஜய் வசந்த் ஒரு லட்சத்து 21 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

 

Tags :

Share via