வெற்றி பெற்ற மம்தா தோல்வி என அறிவிப்பு 

by Editor / 02-05-2021 06:55:51pm
 வெற்றி பெற்ற மம்தா தோல்வி என அறிவிப்பு 


மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் கடும் போட்டிக்கு பின் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். 
மேற்கு வங்கத்தில் நந்திகிராம் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிட்டார். இவரை எதிர்த்து முன்னாள் திரிணாமுல் உறுப்பினரும், மமதாவின் நெருங்கிய நண்பருமான சுவேண்டு அதிகாரி போட்டியிட்டார். பாஜக சார்பாக இவர் களமிறக்கப்பட்டார்.தேர்தலுக்கு சில வாரங்களுக்கு முன் சுவேண்டு அதிகாரி குடும்பத்தை சேர்ந்த முக்கிய அரசியல் தலைவர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தனர். ஒரு காலத்தில் திரிணாமுல் காங்கிரசில் அதிக அதிகாரம் மிக்க குடும்பமாக அதிகாரியின் குடும்பம் இருந்தது.இப்படிப்பட்ட அதிகாரி குடும்பம் பாஜகவிற்கு தாவியது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது. அதோடு மமதாவிற்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் சுவேண்டு களமிறக்கப்பட்டார். 
இந்த நிலையில் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் பின்னடைவை சந்தித்தார். காலையில் 8000 - 9000 வாக்குகள் கூட மமதா பின்னடைவில் இருந்தார்.இந்த நிலையில் தற்போது சுவேண்டு அதிகாரியை பின்னுக்கு தள்ளி மமதா பானர்ஜி முன்னிலை பெற்றார். 2700 வாக்குகள் வித்தியாசத்தில் மமதா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் முன்னிலை பெற்றார். ஆனால் சில நிமிடங்களில் மீண்டும் அதிகாரி முன்னிலை பெற்றார். 6 வாக்குகள் வித்தியாசத்தில் அதிகாரி முன்னிலை வகித்தார்.இதனால் மமதா எங்கே தோற்றுவிடுவாரோ என்று கருதப்பட்ட நிலையில் கடைசி சுற்றில் 1200 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால் தற்போது தற்போது திடீர் திருப்பமாக 1622 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் சுவேண்டு அதிகாரியிடம் மமதா தோல்வி அடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளார். மமதா முதலில் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது திடீரென தோல்வி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via