நட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி

by Admin / 24-11-2018
நட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி

காமரூன் அணிக்கு எதிரான சர்வதேச நட்பு கால்பந்து போட்டியில் பிரேசில் அணி 1–0 என வெற்றி பெற்றது.

நட்பு கால்பந்து: பிரேசில் வெற்றி

உலகின் பல்வேறு பகுதிகளில் நட்பு கால்பந்து போட்டிகள் நடக்கின்றன. இங்கிலாந்தில் நடந்த போட்டியில் பிரேசில், காமரூன் அணிகள் மோதின. போட்டியின் 8வது நிமிடத்தில் தொடைப்பகுதி காயம் காரணமாக, பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் போட்டியிலிருந்து வெளியேறினார். இருப்பினும், 45வது நிமிடத்தில் ரிச்சர்லிசன் கோல் அடித்தார். கடைசி வரை போராடிய எதிரணி வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், பிரேசில் அணி 1–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. பெல்ஜியத்தின் ஜென்ங் நகரில் நடந்த மற்றொரு நட்பு போட்டியில் இத்தாலி, அமெரிக்கா அணிகள் மோதின. கடைசி கட்டத்தில் மாட்டே (90+4 நிமிடம்) கோல் அடிக்க இத்தாலி 1–0 என வெற்றி பெற்றது.