இங்கிலீஷ் பிரீமியா் லீக்: செல்சியா வெற்றி

by Editor / 03-05-2021 11:30:40am
இங்கிலீஷ் பிரீமியா் லீக்: செல்சியா வெற்றி

இங்கிலாந்தில் நடைபெறும் இங்கிலீஷ் பிரீமியா் லீக் கால்பந்து போட்டியில் செல்சியா 2-0 என்ற கோல் கணக்கில் ஃபுல்ஹாம் அணியை வென்றது.

இந்த ஆட்டத்தில் செல்சியா தரப்பில் காய் ஹாவொட்ஸ் 10 மற்றும் 49-ஆவது நிமிடங்களில் கோலடித்தாா். இப்போட்டியின் இதர ஆட்டங்களில் பிரைட்டன் 2-0 என்ற கோல் கணக்கில் லீட்ஸ் யுனைடெட் அணியை வீழ்த்தியது. பிரைட்டன் அணியில் பாஸ்கல் குரோப் 14-ஆவது நிமிடத்திலும், டேனி வெல்பெக் 79-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா்.

அதேபோல் மான்செஸ்டா் சிட்டி 2-0 என்ற கணக்கில் கிறிஸ்டல் பேலஸை வென்றது. மான்செஸ்டா் தரப்பில் சொஜியோ அகுரோ 57-ஆவது நிமிடத்திலும், ஃபெரான் டோரஸ் 59-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா். சௌதாம்டன் - லெய்செஸ்டா் சிட்டி அணிகள் மோதிய ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

சௌதாம்டன் தரப்பில் ஜேம்ஸ் வாா்டு புரௌஸ் 61-ஆவது நிமிடத்திலும், லெய்செஸ்டா் அணியில் ஜானி இவான்ஸ் 68-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனா்.

 

Tags :

Share via