கேரள சட்டப்பேரவையில் முதல்வராக மாமனார்; எம்எல்ஏவாக மருமகன்

by Editor / 03-05-2021 04:58:37pm
கேரள சட்டப்பேரவையில் முதல்வராக மாமனார்; எம்எல்ஏவாக மருமகன்

கேரள சட்டப்பேரவையில் கடந்த காலங்களில் தந்தை -மகன், தந்தை - மகள் என சட்டப்பேரவைக்குள் எம்எல்ஏக்களாக வந்துள்ளனர். ஆனால், முதல் முறையாக மாமனார், மருமகன் ஜோடியாக சட்டப்பேரவைக்குள் வருவது இதுதான் முதல் முறையாகும்.2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் கோழிக்கோடு தொகுதியில் முகமது ரியாஸ் போட்டியிட்டுத் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தலில் தந்தை மகன், அரசியல் தலைவர்களின் நெருங்கிய உறவுகள் எனப் போட்டியிட்டாலும் அவர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர். மாமனார், மருமகன் ஜோடியாக யாரும் வெற்றி பெறவில்லை.பாலா தொகுதியில் போட்டியிட்ட இடதுசாரி கூட்டணியில் இருந்த கேரள காங்கிரஸ் மாணி கட்சியின் தலைவர் ஜோஸ் கே.மாணி, திரிகாரிபூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோஸ் கே.மாணியின் மைத்துனர் எம்.பி.ஜோஸப் இருவரும் தோல்வி அடைந்தனர்.கேரள காங்கிரஸ் தலைவர் பி.ஜே.ஜோஸப் தொடுபுழாவில் போட்டியிட்டார். அவரின் மருமகன் ஜோஸப், கொத்தமங்களம் தொகுதியில் போட்டியிட்டார். இருவருமே தோற்றுப்போனார்கள்.

 

Tags :

Share via