ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்

by Admin / 24-11-2018
ஏ.டி.பி. டென்னிஸ்: அரைஇறுதியில் பெடரர்

டாப்-8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள ஏ.டி.பி. டூர் இறுதி சுற்று டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடந்து வருகிறது.

இதில் ஹெவிட் பிரிவில் நேற்று முன்தினம் இரவு நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் கெவின் ஆண்டர்சனை (தென்ஆப்பிரிக்கா) தோற்கடித்தார். இதன் மூலம் 2 வெற்றி, ஒரு தோல்வி என்று தனது பிரிவில் முதலிடத்தை பிடித்து பெடரர் அரைஇறுதிக்கு முன்னேறினார். ஆண்டர்சனும் ஏற்கனவே (2 வெற்றி, ஒரு தோல்வி) அரைஇறுதியை உறுதி செய்து விட்டார். கவுரவமிக்க இந்த போட்டியில் 16-வது முறையாக பங்கேற்றுள்ள 37 வயதான ரோஜர் பெடரர் அதில் அரைஇறுதியை எட்டியிருப்பது இது 15-வது முறையாகும். குயர்டன் பிரிவில் நேற்று நடந்த ஒரு ஆட்டத்தில் ஜெர்மனியின் இளம் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 7-6 (5), 6-3 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்காவின் ஜான் இஸ்னரை வீழ்த்தி முதல்முறையாக அரைஇறுதிக்குள் நுழைந்தார். அரைஇறுதி ஆட்டங்களில் ஸ்வெரேவ்-பெடரர், ஜோகோவிச்(செர்பியா)- கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா) ஆகியோர் மோதுகிறார்கள்.

Share via