7-ம் தேதி அதிமுக  எம்எல்ஏக்கள் கூட்டம்

by Editor / 03-05-2021 08:12:14pm
7-ம் தேதி அதிமுக  எம்எல்ஏக்கள் கூட்டம்



அதிமுக தலைமைக் கழகம்  வெளியிட்ட அறிவிப்பில், "நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைப் பொதுத்தேர்தலில், அதிமுகவின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்களின் கூட்டம், தலைமைக் கழகத்தில் வருகின்ற 07.05.2021, வெள்ளிக்கிழமை, மாலை 4.30 மணிக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறுகிறது.இக்கூட்டத்தில், அதிமுகவின் சார்பில் வெற்றி பெற்றுள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆகியோரின் ஒப்புதலோடு இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via