‘சுமோ’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறது!

by Others / 04-05-2021 09:28:49am
‘சுமோ’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறது!

கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டு இருப்பதை தொடர்ந்து திரைக்கு வர தயாராக இருந்த படங்களை ஓடிடி தளத்தில் வெளியிட முயற்சிகள் நடக்கின்றன. தனுஷின் ஜகமே தந்திரம் படம் அடுத்த மாதம் ஓடிடியில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளனர். இதுபோல் விஜய்சேதுபதியின் துக்ளக் தர்பார், நயன்தாரா நடித்துள்ள நெற்றிக்கண், திரிஷாவின் ராங்கி ஆகிய படங்களை ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன.  இந்தநிலையில் சிவாவின் சுமோ படம் ஓடிடியில் வெளியாவது உறுதியாகி உள்ளது. இந்த படத்தில் சிவா கதாநாயகனாகவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும் யோகிபாபு, வி.டி.வி. கணேஷ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹோசிமின் இப்படத்தை இயக்கி உள்ளார்.
மல்யுத்த வீரர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகி உள்ள இப்படத்தில், மல்யுத்த வீரர் யோஷினோரி தாஷிரோவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

‘சுமோ’ திரைப்படம் ஓடிடி-யில் வெளியாகிறது!

 

Tags :

Share via