2 மாதத்திற்கு இலவச ரேஷன்,  மாதம் ரூ.5000- டெல்லி முதல்வர் 

by Editor / 04-05-2021 04:16:09pm
2 மாதத்திற்கு இலவச ரேஷன்,  மாதம் ரூ.5000- டெல்லி முதல்வர் 

 

டெல்லியில் கொரோனா காரணமாக பொதுமுடக்கம் அமலில் உள்ள நிலையில் ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாக டெல்லி முதல்வர் அறிவித்துள்ளார்.
 இந்தியா முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ள நிலையில் தலைநகர் டெல்லியில் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லியில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டு வருகிறது. கொரோனா காரணமாக டெல்லியில் பொதுமுடக்கம் அமலில் இருப்பதால் 2 மாதத்திற்கான ரேஷன் பொருட்களை இலவசமாக வழங்குவதாகவும், அனைத்து ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்களுக்கும் மாதம் ரூ.5000 உதவி தொகையாக வழங்கவும் முதல்வர் அரவிந்த கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via