உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்

by Admin / 24-11-2018
உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்

புதுடெல்லி, உலக கோப்பை ஆக்கி போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். உலக கோப்பை ஆக்கி 14–வது உலக கோப்பை ஆக்கி போட்டி ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் உள்ள கலிங்கா ஸ்டேடியத்தில் வருகிற 28–ந் தேதி முதல் டிசம்பர் 16–ந் தேதி வரை நடக்கிறது.

உலக கோப்பை ஆக்கி: இந்திய அணிக்கு மன்பிரீத் சிங் கேப்டன்

இதில் கலந்து கொள்ளும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இடத்தை பிடிக்கும் அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2–வது மற்றும் 3 இடத்தை பிடிக்கும் அணிகள் மற்ற பிரிவில் 2–வது அல்லது 3–வது இடம் பிடித்த அணியுடன் ஒரு ஆட்டத்தில் மோதும். இதில் வெற்றி பெறும் அணிகள் கால்இறுதிக்குள் நுழையும். மன்பிரீத் சிங் கேப்டன் ‘ஏ’ பிரிவில் ஒலிம்பிக் சாம்பியன் அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, அயர்லாந்து, சீனா அணிகளும், ‘சி’ பிரிவில் உலக தரவரிசையில் 3–வது இடத்தில் உள்ள பெல்ஜியம், இந்தியா, கனடா, தென்ஆப்பிரிக்கா அணிகளும், ‘டி’ பிரிவில் உலக தரவரிசையில் 4–வது இடத்தில் இருக்கும் நெதர்லாந்து, ஜெர்மனி, மலேசியா, பாகிஸ்தான் அணிகளும் இடம் பிடித்துள்ளன. இந்திய அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை (28–ந் தேதி) எதிர்கொள்கிறது. உலக கோப்பை போட்டிக்கான இந்திய ஆக்கி அணி பயிற்சி முகாம் புவனேஸ்வரத்தில் நடந்து வருகிறது. இந்த பயிற்சி முகாமில் 34 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் இருந்து 18 பேர் கொண்ட இந்திய ஆக்கி அணியை, ஆக்கி இந்தியா அமைப்பு நேற்று அறிவித்தது. அணியின் கேப்டனாக மன்பிரீத் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிய சுனில், சீனியர் வீரர் ரூபிந்தர் பால்சிங் ஆகியோருக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை.