மு.க ஸ்டாலின் - கமல் ஹாசன் சந்திப்பு

by Editor / 04-05-2021 06:54:10pm
 மு.க ஸ்டாலின் - கமல் ஹாசன் சந்திப்பு


 

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுக 159 இடங்களில் வெற்றியடைந்து, ஆட்சியை அமைக்க இருக்கிறது. திமுக தலைமையிலான ஆட்சி வரும் 7 ஆம் தேதி அமைக்கப்படும் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.தேர்தல் முடிவுகள் வெளியானதை தொடர்ந்து, திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பில் வாழ்த்துக்கள் வந்துகொண்டிருக்கும் நிலையில், பலரும் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பதிவு செய்து வருகின்றனர். 
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினை மக்கள் நீதி மய்யம் கட்சியினர் தலைவர் கமல் ஹாசன் சந்தித்துள்ளார். சென்னையில் உள்ள ஆழ்வார்பேட்டை இல்லத்தில் மு.க ஸ்டாலினை நடிகர் கமல் ஹாசன் சந்தித்துள்ளார். மேலும், சட்டமன்றத்தேர்தலில் திமுக அடைந்த வெற்றிக்கு நடிகர் கமல் ஹாசன் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via