திமுக சட்டமன்றக் குழு  தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

by Editor / 04-05-2021 07:41:02pm
திமுக சட்டமன்றக் குழு  தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு

 


தமிழகத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலின் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில், திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி அடைந்துள்ளது. இதனையடுத்து, விரைவில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியை அமைப்பதற்கான வழிகளை மேற்கொண்டு வருகிறது. திமுக கூட்டணி 159 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அதிமுக 75 கூட்டணி தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.
 திமுக சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், அண்ணா அறிவாலயத்தில் திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் தேர்வு நடைபெறுகிறது, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்கள் ஆகியோர் கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது.
. இந்நிலையில் தேர்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடந்தது. அதில் திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்ற கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். முதல்வராவதற்கு கட்சி ரீதியில் ஒருவரை எம்.எல்.ஏ.க்களின் தலைவராக் தேர்வு செய்ய வேண்டியது அவசியம் என்பதன் அடிப்படையில் இந்த தேர்வு நடந்துள்ளது.
தமிழ்நாட்டில் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்சி அமைக்க போகிறது திராவிட முன்னேற்றக் கழகம். வரும் 7-ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எளிமையாக நடைபெறவுள்ள விழாவில் முதல்வராக பதவியேற்கவிருக்கிறார் மு.க.ஸ்டாலின். இந்த நிலையில் தமிழக அமைச்சரவை பட்டியலில் யார் யார் இடம்பெற போகிறார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு எகிறியுள்ளது.

 

Tags :

Share via