ஜனவரி 23, 2025
மனதில் நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். வியாபாரத்தில் சில தந்திரங்களை புரிந்து கொள்வீர்கள். பதற்றமின்றி கடினமான பணிகளையும் செய்து முடிப்பீர்கள். புதிய இலக்குகளை நிர்ணயம் செய்வீர்கள். மனதளவில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். உதவி கிடைக்கும் நாள்.