திமுக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது -துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
திமுக செய்த சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடிபழனிச்சாமி தனிப்பட்ட தாக்குதல்களை தொடுத்து வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கிறார் என்றும் நாங்கள் அரசு ஊழியர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்தை வழங்கி இருக்கிறோம் . மகளிர் உரிமைத் தொகை ஆயிரத்தில் இருந்து 2000 ஆக உயர்த்தியுள்ளோம் .முதியோர்களின் உதவி தொகை 2000 ஆக உயர்த்தி கொடுக்கப்பட உள்ளது .நான் முதல்வன் திட்டத்திலும் படித்துவிட்டு வேலையில்லாத இருக்கும் இளைஞர்களுக்கு மாதம் தோறும் உதவித் தொகை வழங்க உள்ளோம்.. மகளிர் அவர்கள் விரும்புகின்ற வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்கு 8000 ரூபாய் கூப்பன் தருகிறோம் என்று சொல்லி உள்ளோம் .எங்களுடைய அடுத்த அமைய உள்ள2.0 ஆட்சியில் ஐந்து ஆண்டுகளில் வீடு இல்லாதவர்களுக்கு 40 லட்சம் வீடு கட்டி கொடுக்க உள்ளோம் என்றும் திமுக வாக்குறுதிகளை நிறைவேற்றி வருவதாக அதை முன் வைத்தே நாங்கள் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.
Tags :











.jpg)







