பாகிஸ்தானில் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு.. 16 பேர் பலி
பாகிஸ்தானில் அடிப்படை உரிமைகள் மற்றும் மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் உயிரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அந்த நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ நடவடிக்கைக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து, சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.
Tags :



















