இந்தோனேசிய நடன கலைஞர்கள் தமிழ் சமஸ்கிருத சிவ பெருமானை போற்றும் பக்தி கீதங்களை பரதநாட்டியம் ஆடி பாடி வரவேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஆறு நாட்கள் பயணம் மேற்கொண்டார். இந்தோனேசியா ஜகார்தா விமான நிலையத்தில் ,பிரதமரை. இந்தோனேசியா அதிபர் சுபியாந்தோ விமானநிலையத்தில் வரவேற்றாா். இந்தோனேசிய நடன கலைஞர்கள் தமிழ் மற்றும் சமஸ்கிருத சிவ பெருமானை போற்றும் பக்தி கீதங்களை பாடி பரதநாட்டியம் ஆடினர். என் நிகழ்வை பிரதமர் நரேந்திர மோடி ரசித்து பார்த்ததோடு அதில் பங்கேற்ற நடன கலைஞர்களை பாராட்டினார். இந்நிகழ்வில் இந்திய வம்சாவளியினர் மட்டுமின்றி பல இந்தோனேசிய மாணவிகளும் பரதநாட்டியம் ஆடியது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. பரதநாட்டியம் தவிர இராமாயண கதைகளை விவரிக்கும் இந்தோனேசியாவின் பாரம்பரிய நிழல் தோல்பாவை கூத்து மற்றும் பௌத்த மத வழிபாட்டு நடனங்களும் இடம்பெற்று இருந்தன.
Tags :



















