இன்று நாட்டின் முதலாவது இணைய வழி மக்கள் தொகை கணக்கெடுப்பு முதலமைச்சர் விஜய் இணைய வழியில் பதிவு
தமிழ்நாட்டில் இன்று நாட்டின் முதலாவது இணைய வழி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது. தமிழக முதலமைச்சர் விஜய் இணைய வழியில் தனது சுய விபரங்களை பதிவு செய்து பணியை தொடங்கி வைத்தார். இது குறித்து முதலமைச்சர் மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது வெறும் எண்ணிக்கை அல்ல பொதுமக்கள் வழங்கும் துல்லியமான தகவல்களை அரசின் அனைத்து எதிர்கால நலத்திட்டங்களுக்கும் அடிப்படையாகும் என்றும் பொதுமக்கள் இணையத்தின் பகிரும் அனைத்து தனிப்பட்ட விவரங்களும் மிகவும் பாதுகாப்பாகவும் ரகசியமாகவும் வைத்திருக்கப்படும் எனவும் தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்பங்களும் தங்களின் உண்மையான மற்றும் முழுமையான தகவல்களை வழங்கி இந்த டிஜிட்டல் கணக்கெடுப்பை வெற்றிகரமாக முடிக்க ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இக்கணக்கெடுப்பு ஜூலை 17 இல் இருந்து ஜூலை 31 வரை ஆன்லைனில் தாங்களாகவே பதிவு செய்யும் முறையும் நேரடியாக வீட்டு கணக்கெடுக்கு பணி ஆகஸ்ட் 1 முதல் ஆகஸ்ட் 30 வரை களப்பணியாளர்கள் நேரடியாக வீடுகளுக்கு வந்து கணக்கு எடுக்கும் பணி நடைபெறும் . மத்திய அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் se.census.gov.in என்ற இணையதள போற்றலுக்குள் சென்று பதிவிட வேண்டும் என்றும் குடும்பத் தலைவர் தங்களின் செல்லிடை பேசி எண் மற்றும் தேவையான அடிப்படை விவரங்களை உள்ளிட்டு ஓடிபி சரிபார்ப்பு மூலம் உள்ளே நுழைய வேண்டும் என்றும் போற்றலில் கேட்கப்படும் 33 கேள்விகளுக்கு உரிய விபரங்களை 16 மொழிகளில் ஏதேனும் ஒரு மூலிகை வழியாக பூர்த்தி செய்யலாம் என்றும் முழுமையான விவரங்கள் பதிவு செய்து சமர்ப்பித்த உடன் 11 இலக்க சுய கணக்கெடுப்பு அடையாள எண் உருவாக்கப்பட்டு மொபைல் எண்ணிற்கு குறுஞ்செய்தியாக வரும்.ஆகஸ்ட் மாதத்தில் கணக்கெடுப்பு அலுவலர்கள் வீட்டிற்கு வரும்போது இந்த 11 இலக்க எஸ் ஏ ஐ டி காண்பித்தால் போதுமானது. அவர்கள் மீண்டும் விவரங்களை சேகரிக்க தேவை இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இணைய வழி வசதியை பயன்படுத்தி பொதுமக்கள் அனைவரும் தங்களின் விவரங்களை ஜூலை- 31 பதிவு செய்யுமாறு தமிழக அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Tags :


















