குஜராத் மாநில அலகாபாத்தில் சட்டவிரோத பட்டாசு அலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
குஜராத் மாநில அலகாபாத்தில் சட்டவிரோத பட்டாசு அலையில் ஏற்பட்ட தீ விபத்தில் எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பத்துக்கு மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அகமதாபாத் வஸ்திரால் பகுதியில் விபத்து நடந்துள்ளது டேலண்ட் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்த ஆலையின் உரிமையை ஏற்கனவே அரசு ரத்து செய்துள்ள நிலையில் மேகில் தோடியா என்கிற நபர் பண்ணை நிலத்தில் திரைந்த வெளியில் சட்ட விரோதமாக இந்த ஆலையை இயக்கி வந்துள்ளார். இந்த ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தின் சத்தம் மட்டும் ஐந்து கிலோ மீட்டர் தூரம் கேட்டதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். கிட்டத்தட்ட 15 தொழிலாளர்கள் வேலை செய்து வந்ததாகவும் தெரிகிறது. வெடி விபத்து அறிந்து அதிரடிப்படை முகாம் வீரர்கள் தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியை மேற்கொண்டு உள்ளனர் காயம் அடைந்தவர்கள் அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனை, எல்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் விபத்து தொடர்பாக ஆலையின் உரிமையாளர் தோடியாவை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா 50,000 வழங்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சர் பூபேந்திர பணி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நாலு லட்சமும் காயமடைந்தவர்களுக்கு 50,000 நிவாரணத் தொகையாக அறிவித்துள்ளார்.
Tags :



















