பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டதால் நுகர்வோருக்கு விலை உயர்வு ஏற்படவில்லை .
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பீப்பாய் 135 டாலராக உயர்ந்த நிலையில் பெட்ரோலில் 20 சதவீத எத்தனால் கலக்கப்பட்டதால் நுகர்வோருக்கு விலை உயர்வு ஏற்படவில்லை என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் அறிக்கை வாயிலாக தெரிவித்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வின் காரணமாக பெட்ரோல் விலை உயர்வு ஏற்படாததற்கு காரணம் எத்தனால் கலப்பு செய்யப்பட்டது தான் காரணம் என்றும் இல்லையெனில் டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 125 முதல் 130 வரை உயர்ந்திருக்கும் என்றும் உள்நாட்டிலேயே நிலையான விலையில் கொள்முதல் செய்யப்பட்ட 20% எத்தனால் பெட்ரோலில் கலந்ததன் மூலம் நுகர்வோருக்கு லிட்டருக்கு சுமார் 30 வரை சேமிப்பு கிடைத்து விலை உயராமல் 94.77 என்ற நிலையை தொடர்வதாகவும் இந்த எத்தனால் கலப்பு மூலம் இந்தியா இதுவரை 1.90 லட்சம் கோடிக்கு அதிகமான அந்நிய செலவாணியை சேமித்து வைத்துள்ளதாகவும் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது.
Tags :



















