இன்று தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் கனஇன்றுமழை பெய்ய வாய்ப்பு
தமிழ்நாட்டில் 11 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி கோவை தேனி திண்டுக்கல் தென்காசி திருப்பூர் ஈரோடு தர்மபுரி கிருஷ்ணகிரி சேலம் திருப்பத்தூர் போன்ற மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் பொதுவாக வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்திருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags :



















