புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம்

by Admin / 28-08-2026 01:31:31am
புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம்

இலங்கையில் நடந்த டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு எதிராக பங்கேற்ற இரண்டு போட்டிகளில் முதலாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது இரண்டாவது போட்டி ராவில் முடிவடைந்ததை தொடர்ந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு தகுதி பெறும் இந்தியா வாய்ப்பு கடுமையான சிக்கல் கூறியதாக உள்ளது இந்தியா ஒன்றுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிய போதிலும் இரண்டாவது போட்டியில் வெற்றி பெறாததால் புள்ளி பட்டியலில் பெறும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு 53.33 சதவீதமாக இருந்த இந்தியாவின் புள்ளி மதிப்பீடு இந்திராவிற்கு பிறகு 51.52 ஆக குறைந்துள்ளது இதன் காரணமாக இந்தியா தொடர்ந்து ஐந்தாவது இடத்திலேயே நீடித்துக் கொண்டு வருகிறது இப்போட்டியில் வென்றிருந்தால் வங்காளதேசத்தை முந்தி நாலாவது இடத்தை முன்னேறி இருக்கக்கூடிய சூழல் உருவாகி இருக்கும் கொழும்பு டெஸ்டில் இந்திய அணி இலங்கைக்கு ஃபாலோ ஆன் கொடுத்தது 

ஆனால் இலங்கை வீரர்களின்  அபாரமான தடுப்பாட்டத்தால் போட்டி டிராவில் முடிந்தது. உலக அளவில் புள்ளி பட்டியலில் ஆஸ்திரேலியா 80 விழுக்காடு பெற்று முதலாவது இடத்தையும் தென்னாப்பிரிக்க 75 ஆவது சதவீதத்தை பெற்று இரண்டாவது இடத்தையும் நியூசிலாந்து 72.22 சதவீதத்தை பெற்று மூன்றாம் இடத்தையும் வங்காளதேசம் 55.56 சதவீதம் பெற்று நான்காவது இடத்தையும் இந்திய 51.52 சதவீதம் பெற்று ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆஸ்திரேலியாவும் தென்னாப்பிரிக்காவும் வலுவான நிலையில் அடுத்த ஆண்டு லண்டனில் நடக்கும் இறுதிப் போட்டியில் இந்தியா தகுதி பெற வேண்டும் என ஏழு டெஸ்ட் போட்டிகளில் குறைந்தது 5 போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அடுத்து நியூசிலாந்துக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடர் ஆகிய இரண்டிலும் இந்தியா மிகச் சிறப்பாக விளையாண்டால் மட்டுமே தம் முந்தைய வலுவான நிலையை அடைய முடியும். புள்ளி பட்டியலில் முன்னிலையில் இருக்கும் அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்தே இந்தியாவின் எதிர்காலம் உள்ளது.

 

Tags :

Share via
Logo