அமெரிக்காவில் 8 இந்திய நிறுவனங்களுக்கு தடை: டிரம்ப் நிர்வாகம் அதிரடி
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 'அமெரிக்கர்களுக்கே முன்னுரிமை' என்ற கொள்கையின் கீழ், வெளிநாட்டுத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நடைமுறைகளை ஆய்வு செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மைக்ரோசாப்ட், அடோப், காக்னிசன்ட், இன்போசிஸ், டாடா, விப்ரோ உள்ளிட்ட 8 நிறுவனங்கள் நிரந்தரத் தொழிலாளர் சான்றிதழ் (பெர்ம்) திட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்கள் சார்பில் புதிதாகச் சமர்ப்பிக்கப்படும் பெர்ம் விண்ணப்பங்களை ஏற்கவோ, நிலுவையில் உள்ளவற்றைச் செயல்படுத்தவோ முடியாது.
Tags :



















